ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை செய்யலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்

பேரவை கதவு பூட்டப்படுமா, எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா என்ற கேள்விகளுக்கு ஜேசிடி பிரபாகர் பதிலளித்துள்ளார்.

CM Vijay action: Did not violate House decorum: TN  Speaker

முதல்வர் விஜய் செய்த சைகை - TN Assembly

Published On :21 ஜூலை 2026, 12:17 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று அறிவித்தபோது, செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

தமிழக பட்ஜெட் குறித்து அறிவித்த ஜே.சி.டி. பிரபாகர், தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.

அப்போது, செய்தியாளர்கள், பேரவை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

கரூரில் பேசிய முதல்வர் ஜோசப் விஜய், பேரவையில் கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்வதற்குள் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது குறித்து கிண்டலாகப் பேசுகையில், பேரவைக் கதவுகளை பூட்டிவிட வேண்டும் என்றார்.

இது பற்றி செய்தியாளர் ஒருவர், முதல்வர் விஜய் சொன்னது போல பேரவைக் கதவுகள் பூட்டப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஜே.சி.டி. பிரபாகரன், கதவைப் பூட்ட வேண்டும் என்று சொன்னதில், முதல்வர் விஜய் சொன்னதின் அர்த்தம் என்ன என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அவர் சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டு கேள்வி எழுப்பக் கூடாது.

பேரவையில் அவை நடவடிக்கையின்போது, எதிர்க்கட்சிகள் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பதில் சொல்லும்போது, அதற்காகக் காத்திராமல் வெளிநடப்பு செய்கிறார்கள். பதில் சொல்வதைக் கேட்க வேண்டும் அல்லவா?

எனவே, கேள்வி கேட்டு பதில் சொல்வதை கேட்க வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் கதவை பூட்ட வேண்டும் என்று முதல்வர் சொன்னாரே தவிர, கதவைப் பூட்ட வேண்டும் என்பதையே அர்த்தமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குறை கூறியவர்கள் நிறைவாக பதில் சொல்லும்போது அதனை கேட்க வேண்டும் என்று அர்த்தம். கதவை பூட்ட வேண்டும் என்று நேரடியாக அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்ததும், மற்றொரு செய்தியாளர், பேரவைக்குள், முதல்வர் விஜய் கையை கழுத்துக்குக் கீழே அசைத்து சைகைக் காட்டியது விதிமீறல் இல்லையா என்றார்.

செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜேசிடி பிரபாகரன், முதல்வர் விஜய் சைகை காட்டியதில் எந்த விதிமீறலும் இல்லை. அவர் என்னிடம் அனுமதி பெற்றே சைகை காட்டினார் என்றார்.

உடனே அடுத்த கேள்வி வந்தவிட்டது, அதுபோல எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் சைகை காட்டலாமா என்று செய்திளார் கேள்வி எழுப்பினார். அதனை சற்றும் எதிர்பாராத பேரவைத் தலைவர், சைகை செய்வதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும். எந்த விதமான சைகை செய்யப் போகிறார்கள் என்று சொல்ல வேண்டும் என்றார்.

இதற்கு, முன்கூட்டியே விஜய் எந்தவிதமான சைகை காட்டப் போகிறேன் என்பதை உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தாரா? என்று அடுத்த கேள்வி வந்தது.

இல்லை. விஜய் கையை வைத்திருந்ததைப் பார்த்தே அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று சாமர்த்தியமாக பதிலளித்தார் அவைத் தலைவர்.

அதுபோல, எதிர்க்கட்சியினர் சைகை காட்ட வேண்டும் என்றால் என்னிடம் முன் அனுமதி பெறவேண்டும். அவர்கள் எந்த சைகை செய்யப்போகிறார் என்று சொன்னால் அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.

Summary

Will the Assembly doors be locked? Might the opposition parties also signal a move? JCT Prabhakar responds.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.