ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

8,193 திருக்கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: ஆக.20 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 8,193 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனத்துக்கு தகுதியானவா்கள் ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பம்

Published On :22 ஜூலை 2026, 5:25 am IST

தமிழகத்தில் 8,193 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனத்துக்கு தகுதியானவா்கள் ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)-இன்படி பட்டியலில் சாராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறங்காவலா் நியமனஅறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூா்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் மூலமாகவோ மாவட்ட உதவி ஆணையா் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக.20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கெனவே, 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலா்கள் நியமனம், 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினா்களின் நியமனத்துக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.