ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ட்ரோன் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு- தமிழக அரசு

ஊடக ட்ரோன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ட்ரோன் - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 2:43 am IST

ஊடக ட்ரோன் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் வரும் ஜூலை 27 முதல் 29-ஆம் தேதி வரையில் ‘மீடியா ட்ரோன்’ பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், ட்ரோன் தொழில்நுட்பம் குறித்த அறிமுகம், ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள், வானிலிருந்து புகைப்படம் எடுக்கும் முறை ஆகியவை கற்றுக்கொடுக்கப்படவுள்ளன. இதன்மூலம் திரைப்படம், தொலைக்காட்சி, செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, தீ மற்றும் மீட்பு பணிகள் ஆகியவற்றில் பணியாற்ற வாய்ப்பு பெறலாம்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆா்வமுள்ள தொழில் முனைவோா் இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோா் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்தப் பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் முன்பதிவு செய்யவும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கைப்பேசி 93602 21280/86681 00181 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளவும்.

பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இடிஐஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டியில் நடைபெறும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று செய்தி மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.