ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேராவூரணியில் அதிகாலையில் தீ விபத்து! மெஸ் உள்பட 4 கடைகள் எரிந்து நாசம்!

பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உணவகம், மெக்கானிக் ஷாப் உள்பட 4 கடைகள் எரிந்து குறித்து...

Early morning fire in Peravurani

பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உணவகம், மெக்கானிக் ஷாப் உள்பட 4 கடைகள் எரிந்து சாம்பலாயின. - டிஎன்எஸ்

Published On :20 ஜூலை 2026, 8:28 am IST

தஞ்சாவூர்: பேராவூரணியில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உணவகம், மெக்கானிக் ஷாப் உள்பட 4 கடைகள் எரிந்து நாசமானது.

​தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான 'மணி மெஸ்' என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், உணவகத்தில் சமையல் பணிக்காக ஆயத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக உணவகத்தில் தீப்பற்றியது. இந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் உணவகத்தின் அனைத்து பகுதிக்கும் மளமளவெனப் பரவியது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த , சமையல் எரிவாயு உருளை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பிழம்புகள் அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாகப் பரவின.

இதில், நாகப்பன் என்பவருக்குச் சொந்தமான டயர் பஞ்சர் மற்றும் மெக்கானிக் ஷாப், சின்னையன் மற்றும் முத்துராமன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு பெட்டிக்கடைகள் என மொத்தம் நான்கு கடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

இந்த தீ விபத்தில் உணவகத்தில் பணியில் இருந்த சமையலர் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறியதால், நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதுமில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேராவூரணி மற்றும் அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது.‌

இந்த தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

Summary

Early morning fire in Peravurani! Four shops, including a mess, gutted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.