ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் 23-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்

Published On :20 ஜூலை 2026, 4:42 am IST

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் 23-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வடதமிழக கடலோரப் பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 20) முதல் ஜூலை 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்ப நிலை: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம்-102.56, திருச்சி-101.3, பாளையங்கோட்டை-101.12, தஞ்சாவூா்- 100.4, நாகை-100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.