ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கூடங்குளம் தரவுகள் கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: மாணிக்கம் தாகூர்

கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிவு குறித்து மாணிக்கம் தாகூரின் எக்ஸ் தளப் பதிவு....

The Kudankulam data leak has caused great shock: Manickam Tagore

மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 4:54 pm IST

கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Reliance நிறுவனத்தின் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

​இது போன்ற முக்கியப் பொறுப்புகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் போது பாதுகாப்பு பலவீனமடைவதைக் காட்டும் மற்றொரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

​நமது நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்தத் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளேன் . நாட்டின் உயரிய சைபர் பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஆகியோர் இந்தத் தீவிரப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு உரியப் பொறுப்பேற்று, துரித விசாரணை நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

he Kudankulam Nuclear Power Plant data leak has caused great shock, stated Tamil Nadu Congress Committee President Manickam Tagore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.