ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் : கவனம் ஈர்த்த புதிய மாற்றம்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம் பற்றி....

Portraits of former Chief Ministers in the Coimbatore Municipal Corporation Council Hall

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கம்.

Published On :17 ஜூலை 2026, 4:40 pm IST

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படம் மட்டும் ஆணையர் இருக்கை அருகே வைக்கப்பட்டிருந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் காமராஜரின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று காங்கிரஸ் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முந்தைய ஆட்சியின் முதல்வரின் புகைப்படம் மட்டுமே வைக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்ததையடுத்து ஸ்டாலின் புகைப்படம் மட்டும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அரங்கின் தோற்றம் முற்றிலும் மாறியிருந்தது. தற்போதைய முதல்வர் விஜய் புகைப்படத்துடன், அதற்கு அருகில் முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், அரங்கின் வலப்புறச் சுவரில் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும், இடப்புறச் சுவரில் பெருந்தலைவர் காமராஜர், பக்தவச்சலம், சி. ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

இதனுடன் மகாத்மா காந்தியின் உருவப்படமும் அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், முன்னாள் முதல்வர்கள் வி.என். ஜானகி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் பல்வேறு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் ஒரே நேரத்தில் இடம்பெற்றிருப்பது உறுப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Summary

The new change made in the Coimbatore Municipal Corporation Council Hall has drawn everyone's attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.