ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொரப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளம் ஜோடி தற்கொலை!

மொரப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளம் ஜோடி தற்கொலை செய்துகொண்டது பற்றி...

Sucide

தற்கொலை - பிரதிப் படம்

Published On :16 ஜூலை 2026, 2:08 pm IST

மொரப்பூரில் ரயில் முன் பாய்ந்து இளம் காதல் ஜோடி வியாழக்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மணிலா நிலையம் அருகேயுள்ள ஆவலம்பட்டி பிரிவு சாலை அருகே ரயில் தண்டவாளத்தில், இன்று காலை ஆண், பெண் இருவர் உடல்கள் சிதறிக் கிடப்பதாக மொரப்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கிடத்தது. இதனையடுத்து நிகழ்விடம் சென்ற போலீசார் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சடலங்கள் கிடந்த இடத்திற்கு அருகில், இருசக்கர வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வண்டி பதிவு எண்ணை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அங்கு இறந்து கிடந்தது தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் எட்டிப்பட்டி கிராமத்தை கன்சிராம் ராணா (19), அதே பகுதியைச் சேர்ந்த அமுதபிரியா (என்கிற) அறிவு ஜோதி (16) என தெரியவந்தது.

இருவரும் காதலித்து வந்ததாகவும், புதன்கிழமை இரவு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்து தண்டாவளத்தில் படுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மொரப்பூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Summary

Young couple commits suicide by jumping in front of a train in Morappur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.