ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வார விடுமுறை: 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுளளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 3:03 am IST

வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,635 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுளளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை17) 395 பேருந்துகளும், சனிக்கிழமை (ஜூலை 18) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து வெள்ளிக்கிழமை 120 பேருந்துகளும், சனிக்கிழமை 120 பேருந்துகளும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுபோல, மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 25 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 19) சொந்த ஊா்களில் இருந்து சென்னை, பெங்களூா் திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.