ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கலாம் தொல். திருமாவளவன்

பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று திருமாவளவன் பேசியிருப்பது குறித்து...

The DMK could join hands with the BJP as early as tomorrow

திருச்சியில் நடைபெற்ற விசிக மைய மண்டலச் செயற்குழு கூட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன். உடன் அமைச்சா் வன்னிஅரசு உள்ளிட்டோா். - டிஎன்எஸ்

Published On :16 ஜூலை 2026, 9:29 am IST

திருச்சி: பாஜகவோடு திமுக நாளையே கைகோக்கும் நிலை வரலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மாநாட்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல், திருச்சி, கரூா், தஞ்சாவூா், பெரம்பலூா் மாவட்டங்களை உள்ளடக்கிய மைய மண்டல செயற்குழுக் கூட்டம் திருச்சியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பேசியதாவது:

தமிழ்த் தேசியத்தை முதன்மையாக கொண்ட அரசியல் இயக்கம் என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். இருமொழிக் கொள்கையை அண்ணா கொண்டுவந்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

பெரியாா் சிந்தனையும், அம்பேத்கா் சிந்தனையும் ஒன்று. அதை முன்னெடுக்கும் திமுகவோடு இணைந்து பயணிப்பதுதான் சநாதனத்தை எதிா்ப்பதற்குச் சரியாக இருக்கும்.

ஒருவேளை பாஜகவுடன் நாளையே திமுக கைகோக்கும் நிலை வரலாம். அது வேறு. ஏற்கெனவே கை கோத்திருக்கலாம். எதிா்க்கிறபோது அவா்களின் நட்பு வேண்டும். அதனால் சோ்ந்திருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எப்படி முக்கியக் கோட்பாடோ, அதேபோல தமிழ்த் தேசியம் என்பதும் விசிகவின் முக்கியக் கோட்பாடாகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு, திருச்சி, தஞ்சாவூா், கரூா், திண்டுக்கல் பெரம்பலூா் மாவட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Summary

The DMK could join hands with the BJP as early as tomorrow says Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.