ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்

விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் மசோதாவுக்கு மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி...

Manickam Tagore

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 10:46 am IST

கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்திய உயர்கல்வி அமைப்புகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவரும் விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (Viksit Bharat Shiksha Adhishthan) மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை காலை மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

”உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறித்து, கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது!

​நீட் முறைகேடுகளையும், வினாத்தாள் கசிவுகளையும் கூடத் தடுக்கத் துப்பில்லாத மத்திய கல்வி அமைச்சகம், இப்போது பல்கலைக்கழகங்களைச் சீரழிக்கப் பார்க்கிறது!

யுஜிசி, ஏஐசிடிஇ போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு கொண்டு வரப்படும் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (Viksit Bharat Shiksha Adhishthan) மசோதா 2025' இந்தியாவின் உயர்கல்வியைக் குழிதோண்டிப் புதைக்கும் எதேச்சதிகார நடவடிக்கை!

​ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்கும் ஊழல், மறுபுறம் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரம்! மோடி அரசும், அவரது திறமையற்ற கல்வி அமைச்சரும் இந்திய மாணவர்களின் கனவுகளோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

​இதற்கு எதிராகத்தான் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களின் உரிமைகளுக்காக நம் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாணவர்களின் எதிரொலி (#ChhatronKiGoonj) இயக்கம் மூலம் சமரசமற்ற போரைத் தொடங்கியுள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இந்த மோடி அரசின் அட்டூழியங்கள் அனைத்திற்கும் 2029-ல் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! காலம் மாறும், நம் ஆட்சி மலரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

The Modi government is desperate to bring the education sector under its complete control — Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.