ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லஞ்சம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண்: தமிழ்நாடு அரசு அறிமுகம்!

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது தொடர்பாக...

Tamil Nadu Government launches WhatsApp number

லஞ்சம் குறித்து புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண் - கோப்புப்படம்

Published On :15 ஜூலை 2026, 3:05 pm IST

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்பது குறித்து புகார் அளிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரி, ஊழியர்களின் பெயர், பதவி, அலுவலகம் மற்றும் லஞ்சம் குறித்த ஆதாரங்கள்(ஆடியோ, வீடியோ அல்லது ஆவணங்களை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பலாம்.

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும் ஊழலை ஒழிப்பதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போதும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், அதிகாரிகள் யாரேனும் லஞ்சம் கேட்டால் அதுகுறித்து புகார் அளிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்ஆப் எண்ணை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அனைத்து அரசுத் துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Story image

சுற்றறிக்கை

அந்த சுற்றறிக்கையின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகளின் இணையதளங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்சத்திற்கு எதிரான 'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பலகைகள், புகார் எண் தெளிவாகத் தெரியும்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'லஞ்ச ஒழிப்பு முழக்கம்' மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளிக்கும் வழிமுறைகள் அடங்கிய மாதிரிப் பலகை வடிவம் எழுதி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், இந்த வாட்ஸ்ஆப் எண் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களிலும், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இணையப் பக்கத்திற்கான இணைப்புடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

லஞ்சம் குறித்த புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ்ஆப் எண்

லஞ்சம் தொடர்பான புகார்களைப் மக்கள் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (டிவிஏசி) dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 044-22321090, 22321085, 22310989 மற்றும் 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அல்லது 9498180936 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமமோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நேரடி அல்லது தபால் மூலமான புகார்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்ககம் (டிவிஏசி), எண். 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை - 600016.

Summary

Tamil Nadu Government launches WhatsApp number to report bribery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.