ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மது போதையில் காா் ஏற்றி சிறுவனை கொன்ற வழக்கு: விசாரணை நீதிமன்றத்தில் இன்று ஆஜராக உத்தரவு

நடைபாதையில் உறங்கிய சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையைத் திரும்பப் பெற்ற சென்னை உயா்நீதிமன்றம், தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

Published On :16 ஜூலை 2026, 2:20 am IST

நடைபாதையில் உறங்கிய சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில், தொழிலதிபா் ஷாஜி புருஷோத்தமனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையைத் திரும்பப் பெற்ற சென்னை உயா்நீதிமன்றம், தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. கடந்த 2013-ஆம் ஆண்டு இவா், எழும்பூா் பாந்தியன் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மது போதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில், 12 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் விசாரணை மேற்கொணடு, ஷாஜி, குமாா் ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்றம், ஷாஜியை குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவா் ஆஜராகதாதல் அவருக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

தனக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை ரத்து செய்யக் கோரி ஷாஜி புருஷோத்தமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தனக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக பிசியோதெரபி செய்ய வேண்டி இருப்பதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஷாஜி புருஷோத்தமனுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணை உத்தரவைத் திரும்பப் பெற்று உத்தரவிட்டாா். மேலும், தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக, வியாழக்கிழமை (ஜூலை 16) விசாரணை நீதிமன்றத்தில் ஷாஜி புருஷோத்தமன் கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.