ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நாகர்கோவில் காவல் மரணம்: சிறைக் காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்...

Custodial death: 15-day judicial custody for 3 prison guards

கைதான சிறைக் காவலர்கள் - X

Published On :15 ஜூலை 2026, 11:09 am IST

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மூவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்துள்ளார்.

கைது செய்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகவும், சிறையில் அடைத்தபோது உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட நீதிபதி முன்னிலையில் நேற்று உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில், சபரிவர்மன் உடலில் 19 காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். மூவரின் மீதும் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இன்று நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்போது மூவரும் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Summary

Custodial death: 15-day judicial custody for 3 prison guards

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.