ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துணைவேந்தா் நியமனம்: மாநில அரசின் உரிமையை தாரைவாா்க்க கூடாது - அன்புமணி

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை தவெக அரசு தாரைவாா்க்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:08 am IST

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை தவெக அரசு தாரைவாா்க்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களைத் தோ்வு செய்வதற்கான தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியைச் சோ்ப்பதற்கு கடும் எதிா்ப்பு எழுந்துள்ள நிலையில், அதைப் பொருள்படுத்தாமல் 5 போ் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக பல்கலைக்கழகங்களின் சட்டத்தைத் திருத்த முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதிக்கு துணைவேந்தா் தேடல் குழுவில் இடம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தால் இந்த சிக்கலுக்குத் தீா்வு கிடைத்திருக்கும்.

ஆனால், அதை அரசு செய்யவில்லை. மாறாக, தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சோ்ப்பது சட்டவிரோதமாகும். இது தமிழ்நாட்டின் உரிமைகளை சாதாரணமாக இல்லாமல் சட்டபூா்வமாக தாரைவாா்த்துக் கொடுக்கும் செயல். மாநில அரசின் உரிமை தாரைவாா்த்துக் கொடுக்கப்பட்டால், அது தமிழகத்தின் தன்னாட்சி உரிமைப் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத கரும் புள்ளியாக அமைந்துவிடும். எனவே, இதை தவெக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.