ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் முன்பதிவு பற்றி...

train

ரயில் - (கோப்புப்படம்)

Published On :9 ஜூலை 2026, 10:16 am IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து இயக்கப்படும் 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 16 முதல் 25 வரை கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகைக்காக நாடு முழுவதும் இருந்து கேரளத்துக்கு செல்வோருக்கு வசதியாக 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ஏற்கெனவே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் மங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில்களின் விவரங்களை தெற்கு ரயில்வே நேற்று அறிவித்திருந்தது.

அந்த 6 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ரயில்கள், வழித்தடங்கள் விவரம்...

1. கர்நாடக மாநிலம், மங்களூரு சென்டர்ல் ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 13, 20, 27, ஆக்ஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு ரயில் எண் 06126 புறப்படும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 10.55 மணிக்கு வந்தடையும்.

2. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரிலிருந்து ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ரயில் எண் 06125 புறப்படும். மங்களூரு சென்டர்ல் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் திருப்பூர், காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படவுள்ளது.

3. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் வாரம்தோறும் புதன்கிழமை பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் ரயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

4. மறுமார்க்கத்தில், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில், காட்பாடி, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.

5. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் (06110) மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

6. மறுமார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து ஆகஸ்ட் 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

Summary

Onam Festival! Reservations for 6 special trains have started!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.