ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆன்லைனின் பத்திரப் பதிவு செய்வது எப்படி?

ஆக. 17 முதல் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து...

Property registration via the online mode

கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 7:28 pm IST

சென்னை நந்தனத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் இன்று (ஜூலை 7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதைத் தவிர்க்கும் வகையில் இணைய வழியில் பத்திரப் பதிவு முறை கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், ஆக. 17 முதல் 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு சில ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதிய நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

தேவையான ஆவணங்கள்

1. முதல் விற்பனை மனை

2. முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு

புதிய நடைமுறைகள்

1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.

3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.

5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.

6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண ரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.

7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

8. பதிவுச் சட்டம், 1908-ல் விதி 32, 52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Property registration via the online mode How do I register a property deed online

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.