ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முதல்வர் விஜய்க்கு தடையில்லை! திமுக மனுவை தள்ளுபடி!

கரூர் கூட்டநெரிசல் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சந்திக்க முதல்வர் விஜய்க்கு தடையில்லை என்றும் திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

Karur stampede: Chief Minister Vijay to meet the affected

கரூர் | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :8 ஜூலை 2026, 3:50 pm IST

புது தில்லி: முதல்வர் ஜோசப் விஜய், கரூர் கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைத் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பதைக் கேள்விக்குள்ளாக்கியதற்காக திமுகவை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பான விசாரணையைப் பாதிக்கும் வகையிலோ, நிலுவையில் உள்ள விசாரணை குறித்தோ தமிழக முதல்வா் ஜோசப் விஜய் உள்பட எவரும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்று உத்தரவிடக்கோரியும், முதல்வர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், முதல்வரின் பேச்சை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கு வாதத்தின்போது, முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று திமுக வழக்குரைஞர் கூறியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, கரூர் பலி வழக்கில், முதல்வர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக எங்கும் சேர்க்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? என்றும் திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விசாரணையின் நிறைவாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை, முதல்வர் விஜய் நேரில் சந்திப்பதும், அவர்களது குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதும், வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் என்று குற்றம்சாட்டி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுமாறு திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது; இல்லையெனில், அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.