மதுரை அழகர் கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.
மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் மலையில் முருகப்பெருமானின் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம் பழமுதிர்சோலை மட்டுமே.
முருகனின் அறுபடை வீடுகளில் சோலைமலை முருகன் கோயில் ஆறாவது படை வீடாக திகழ்கிறது. முருகன் கோயில் அமைந்துள்ள இந்தப் பகுதி பழமுதிா்ச்சோலை, தீா்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்குதான் முருகன் ஆடு மேய்க்கும் சிறுவனாக தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு காட்சி அளித்தாா் என புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதா் பாடல் பெற்ற தலம். இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளியுள்ளாா்.
இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. இதனிடையே, ஜூலை 1 ஆம் தேதியில் மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று (ஆனி 21) அதிகாலை 5. 30 மணிக்கு மேல் 6. 30 மணிக்குள் மூலவரான வள்ளி, தெய்வானை உடனுறை சோலைமலை முருகன் கோயில் விமானத்துக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, ராஜ கோபுரம் உள்ளிட்ட பரிவார மூா்த்திகளின் விமானங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.

பழமுதிர்சோலை குடமுழுக்கு - DNS
சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஓத ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தீபாராதனைகள் காட்டப்பட்டன. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவுக்காக எல்இடி திரைகள், குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் அறநிலையத்துறையின் சார்பில் செய்யப்பட்டிருந்தன.
மேலும் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள், 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும், இந்த விழாவில் அமைச்சர் நிர்மல் குமாரும் கலந்து கொண்டார்.
பழமுதிர்சோலை குடமுழுக்கு - DNS
Summary
The Maha Kumbabishekam of the renowned Pazhamudircholai Solaimalai Murugan Temple, is being held today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










