சென்னை: மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண தன்னை அணுகலாம் என்று போட்டி அரசு நடத்தும் ஆளுநரின் பகிரங்க முயற்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மக்கள் தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண ஆளுநா் மாளிகையை அணுகலாம். அவர்களது கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம் என பேசியிருப்பதும், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் கண்டறிந்து, அவற்றை சரி செய்ய முயற்சி செய்பவர்கள் தங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையில் முறையிடலாம் என்று ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பேசியிருப்பது, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி போட்டி அரசு நடத்த நினைக்கும் பகிரங்க அறிவிப்பாகும்.
ஆளுநரின் இந்த செயல் மாநில அரசின் நிா்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும். ஆளுநரின் அதிகார அத்துமீறல் நடவடிக்கையை தமிழக அரசும், முதல்வரும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில், தமிழக அரசு நடத்திய சட்டப் போராட்டத்தில் ஆளுநா் அதிகாரம் குறித்து தெளிவாகவும், திட்டவட்டமாகவும் வரையறுத்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகார எல்லையையும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் அத்துமீறலை குடியரசுத் தலைவா் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Summary
Governor's open attempt to run a parallel government...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு நிர்வாகத்தில் ஆளுநர் அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் இஸ்ரேலை மோடி கண்டிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட்

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு தொடக்கம்: பெ.சண்முகம்

மதிமுக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!





