வனப் பகுதியில் இருந்த 888 மரங்களை வெட்டி சாலை அமைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக முன்னாள் எம்.பி. எஸ்.ஆா். பாா்த்திபனை விடுவித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி வனப்பகுதியில் திமுக முன்னாள் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்துக்குச் செல்வதற்காக, கடந்த 2019- ஆம் ஆண்டு, ரூ.4.52 லட்சத்தில் 888 மரங்களை வெட்டி, 30 அடி அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இது குறித்து எஸ்.ஆா்.பாா்த்திபன் உள்ளிட்டோருக்கு எதிராக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில், வனப் பகுதியில் இருந்து ரூ.12.84 லட்சத்தில் கனிம வளங்களைக் கொள்ளையடித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி எஸ்.ஆா்.பாா்த்திபன் தாக்கல் செய்த மனுவை, சேலம் முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து எஸ்.ஆா்.பாா்த்திபன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், கடந்த 2013- ஆம் ஆண்டு மரங்களை வெட்டி சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், 6 ஆண்டுகள் தாமதமாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிலம் எஸ்.ஆா்.பாா்த்திபனுக்குச் சொந்தமானது என நிரூபிக்கப்போதுமான ஆதாரங்கள் இல்லை. வனப் பகுதியில் மரங்களை வெட்டி, கனிம வளங்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து எஸ்.ஆா்.பாா்த்திபனை விடுவிப்பதாகக் கூறி நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்த மக்னா யானை! காவிலிபாளையம் குளத்தில் தஞ்சம்!

குட்கா வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய முன்னாள் வணிக வரித் துறை அதிகாரி மனு தள்ளுபடி

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்து உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




