ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆளுநர் மாளிகையில் மக்களின் பிரச்னைகளைத் தெரிவிக்கலாம்! முதல்வரிடம் தீர்வு!

மக்களின் பிரச்னைகள் குறித்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பேசியது பற்றி...

TN governor RV Arlekar

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் - x / lokbhavan TN

Published On :4 ஜூலை 2026, 1:57 pm IST

ஆளுநர் மாளிகையில் மக்கள் தங்களின் பிரச்னைகளை, குறைகளைத் தெரிவிக்கலாம் என நிகழ்வொன்றில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது.

இதில் பேசிய ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், "நம் சகோதர, சகோதரிகளின் பிரச்னைகளைத் தெரிந்துகொண்டு நாம் அதற்கு தீர்வு காண வேண்டும். மக்கள் பவன் என்றும் மக்களுடன் உள்ளது. மக்கள் சார்ந்த பிரச்னைகளை கொண்டு வாருங்கள். நம்மால் முடிந்தவரை தீர்வு காண்போம். நான் புதிய அரசை தொடர்புகொண்டு முதல்வரிடம் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கிறேன்.

ஆளுநரிடம் இருந்தும் சரி, தமிழக அரசிடம் இருந்தும் சரி, நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதை இங்கு வந்து தெரிவிக்கலாம். நாம் சேர்ந்து தீர்வு காண்போம்" என்று கூறினார்.

வைகை ஆற்றில் நேற்று ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதற்கு தவெக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

You can voice public grievances at the Raj Bhavan: TN governor RV Arlekar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.