ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குதிரை பேரம் நடத்தும் தவெக: ஆளுநரிடம் அதிமுக புகார்

சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்பி இன்பதுரை ஆகியோர் மனு அளித்தனர்.

Published On :4 ஜூலை 2026, 6:55 pm IST

சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்பி இன்பதுரை ஆகியோர் மனு அளித்தனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குதிரை பேரம் எனவும், இடைத்தேர்தலில் பதவி விலகியவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடக்கூடாது எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் மக்கள் மாளிகைக்கு வெளியே அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவரிடம் மனுக்கள் அளித்திருக்கிறோம்.

அதிமுக மனு மீது பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம்.

ஆளுநர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தினோம். அதிமுக எம்எல்ஏக்களை குதிரைப் பேரம் மூலமாக குதிரை வேகத்தில் தவெக விலைக்கு வாங்கி வருகிறது.

குதிரைப் பேரத்தை தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம் என்று கூறினார்.

இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த நிலையில், திமுக நிர்வாகிகளும் மனு அளித்தனர். தொடர்ந்து அதிமுக தலைவர்களும் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.

Summary

"AIADMK Chief Whip Agri Krishnamurthy and MP Inbadurai submitted a memorandum to Governor Arlekar after meeting him at Makkal Maaligai in Chennai."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.