கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

18 பேர் பலி! ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற இன்று நடவடிக்கை

தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றுவது குறித்து...

News image

கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.கவிதா, அதிகாரிகள் உள்ளிட்டோா். - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 8:16 am IST

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலையில் இருந்து அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்ற இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.

இந்த ஆலையில் ஜூன் 21 ஆம் தேதியில் 100 போ் பணிபுரிந்த நிலையில், அமோனியா வாயுத் தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது.

இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சங்காரணை, செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் சென்னை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், ஆலை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆலையில் இருந்து ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் பாதுகாப்பான முறையில் அமோனியா வாயுவை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால், இன்று மாலை 6 மணிக்குள் தொழிற்சாலையைச் சுற்றிலும் 300 மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவனங்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் பணிகள் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

Summary

Action to be taken today to safely remove ammonia gas from a private seafood processing plant

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.