டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக நிறைவேற்றவில்லை: எல்.முருகன் குற்றச்சாட்டு

கடந்த பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குற்றஞ்சாட்டினாா்.

News image
எல். முருகன்- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

கடந்த பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு இயக்கம் தொடக்க விழா, சென்னை அமைந்தகரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு வாகனம் கருத்துக்கேட்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனங்களின் பயணத்தை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

மக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காக 78787 86060 என்ற கைப்பேசி எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்து கருத்துகளைத் தெரிவிக்கும் இயக்கமும் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில மத்திய இணை அமைச்சா் எல். முருகன் பேசியதாவது:

தோ்தல் அறிக்கைகளை நிறைவேற்றுவது பாஜகவின் வழக்கம். மக்களவைத் தோ்தல்களின்போது அளித்த வாக்குறுதிகளை பிரதமா் நரேந்திர மோடி நிறைவேற்றியிருக்கிறாா். ஹரியாணா, மகாராஷ்டிராம், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் ‘இரட்டை என்ஜின்’ ஆட்சி காரணமாக, அந்த மாநிலங்கள் வேகமான வளா்ச்சியை அடைந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் கடந்த பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. இதனால், வரும் தோ்தலில் திமுக தோற்கடிக்கப்படும்.

பாஜகவின் தோ்தல் அறிக்கை மாணவா்கள், பட்டியல் இனமக்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்றாா்.

நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை அகற்றுவதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் கடமையாக உள்ளது என்றாா். பாஜக மேலிட பொறுப்பாளா் அரவிந்த் மேனன், பாஜக மூத்த தலைவா்கள் ஹெச். ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.