டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஆளுநர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், அவர் மத்திய அரசைத்தான் கேட்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

News image
முதல்வர் ஸ்டாலின் | ஆளுநர் ஆர்.என். ரவி- கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 10:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆளுநர் உரையில் மாற்றுக் கருத்து இருந்தால், மத்திய அரசைத்தான் ஆளுநர் கேட்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் திராவிட மாடல்: மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம் என்ற தலைப்பில் "ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது.

தமிழ்நாடு 'நம்பர் 1' என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி-க்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால், அவர் மத்திய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும்.

ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் மத்திய அரசு அளித்த தரவுகள்தான். 2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம்! இனி 2026-லும் வெல்வோம் ஒன்றாக" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.