தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு அடிப்படைக் கல்வி: சிறந்த 342 எழுத்தறிவு மையங்களுக்கு விருது
புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 30 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 342 எழுத்தறிவு மையங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விருது வழங்கினாா்.










