டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடலோர தமிழகத்தில் ஜூன்.23-இல் மிதமான மழைக்கு வாய்ப்பு

கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) முதல் திங்கள்கிழமை (ஜன.26) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2026, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.23) முதல் திங்கள்கிழமை (ஜன.26) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், புதன் மற்றும் வியாழக்கிழமை (ஜன.21, 22) ஆகிய இரு நாள்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (ஜன.23) முதல் ஜன.26 வரை கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.20) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 20 மி.மீ மழையும், நாலுமுக்கு, காக்காச்சி பகுதிகளில் தலா 10 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.