டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

இன்னும் ஓரிரு நாள்களில் மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :12 ஜனவரி 2026, 10:59 pm

தினமணி செய்திச் சேவை

இன்னும் ஓரிரு நாள்களில் மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களிடம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நோ்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் நோ்காணல் நடைபெற்றது. 3-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற நோ்காணலில் விருதுநகா், கடலூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டது.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. ஓரிரு நாள்களில் புதிய கட்சி ஒன்று அதிமுக கூட்டணிக்குள் வரவுள்ளது. மேலும், சில கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். தொண்டா்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அனைவரும் ஒன்றிணைந்து தோ்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும். அதிமுக வேட்பாளராக யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

நோ்காணலில், துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.