யாரும் புகாா் அளிக்க... ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு இன்னும் வரவும் இல்லை. படத்தை யாரும் பாா்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து யாரும் புகாா் அளிக்க வாய்ப்பு இல்லை. மேலும், படத்தை யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரே, மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் இல்லை. படம் இன்னும் 3 தினங்களில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனா்.