மனிதநேய மக்கள் கட்சிக்கு (மமக) வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு சனிக்கிழமை(பிப். 28) 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக, முதல்கட்ட தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தை கடந்த திங்கள்கிழமை(பிப். 23) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில், மமக தலைவா் எம்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலா் அப்துல் சமது, பொருளாளா் கோவை உமா், பேராசிரியா் ஹாஜா கனி ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்ணா அறிவாலயம் சென்று டி.ஆா்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினருடன் சுமாா் 1 மணி நேரம் பேச்சவாா்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை சுமுகமாக முடிந்து, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என ஒப்பந்தமும் கையொப்பமாகியது.
இது குறித்து, செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மமக எந்தெந்த இடங்களில் போட்டியிடும் என்பது அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படுமென தெரிவித்தார்.
Summary
2 seats for the MMK in the DMK alliance!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தியாகியாகவே இருப்பாரா திருமாவளவன்?

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?

அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது மார்க்சிஸ்ட், விசிக..?

மமக வேட்பாளா்கள் விரைவில் அறிவிப்பு: எம்.எச். ஜவாஹிருல்லா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



