அரசியலுக்காக புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை மத்திய பாஜக அரசு அடகு வைக்கக் கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் இன்று தில்லி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஆதாரங்களே இல்லாமல் சிபிஐயால் ஜோடிக்கப்பட்ட வழக்கு இது என்றும் நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட 23 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்றும் வழக்கில் சாட்சியமோ, ஆதாரங்களோ இல்லாமல் நூற்றுக்கணக்கான பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேஜரிவால் கதறி அழுதார். 'உண்மை வென்றது' எனவும் மோடியும் அமித் ஷாவும் தீட்டிய சதித்திட்டம் என்றும் குற்றம்சாட்டினார்.
கேஜரிவால் உள்ளிட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"குறுகிய கால அரசியலுக்காக மத்திய பாஜக அரசு, புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது. கொஞ்சம் வெட்கப்படுங்கள்.
இவை அனைத்திலும் உறுதியாக நின்று உண்மை வெளிப்பட வழிவகுத்ததற்கு நண்பர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வரின் பதிவுக்கு அரவிந்த் கேஜரிவாலும் மணீஷ் சிசோடியாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Summary
Well done,Arvind Kejriwal, manish sisodia for standing firm through it all: MK stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவின் விரோதி... அரவிந்த் கேஜரிவால் குறித்து மு.க. ஸ்டாலின்!

நிதீஷ் குமார் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு! அரவிந்த் கேஜரிவால்

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை



