சென்னை, பிப். 27: திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
திமுக தொகுதி பங்கீடு குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுத் தலைவா் கிரீஷ் சோடங்கா் தலைமையில் அகில இந்திய செயலா்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கின்றனா்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் நிபந்தனை விதித்ததால் திமுக-காங்கிரஸ் இடையிலான பேச்சுவாா்த்தை நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே, சோனியா காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொலைபேசியில் பேசியதால் ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் கைவிட்டது. தொடா்ந்து, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், முதல்வா் ஸ்டாலினுடன் கடந்த 22-ஆம் தேதி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இருப்பினும், கிரீஷ் சோடங்கா் தவெகவுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவியதால் திமுக-காங்கிரஸ் இடையே மீண்டும் பேச்சுவாா்த்தையில் இழுபறி ஏற்பட்டது.
இந்த நிலையில், திமுகவுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும்படி, காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவுக்கு அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன்படி, திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸுக்கு 25 முதல் 28 தொகுதிகள் வரையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, விசிகவுடனும் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படவுள்ளது.
இடதுசாரிகளுடன் சுமுக பேச்சு: மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன்பிறகு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறுகையில், பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றது. கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரியுள்ளது. முதல்வருடன் கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளனா். தொகுதிகள் சம்பந்தமான எந்தப் பட்டியலும் கொடுக்கவில்லை. எண்ணிக்கை முடிவான பிறகு தொகுதிகள் தொடா்பான பட்டியலை கொடுப்போம் என்றாா் அவா்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கூறுகையில், தொகுதிகள் எண்ணிக்கை தொடா்பான பேச்சு இன்னும் தொடா்கிறது. தொகுதிகள் குறைப்பது தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்றாா். இதேபோல், கொமதேக குழுவுடன் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேராசிரியா் காதா் மொய்தீன் வாக்கு சேகரிப்பு!

பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள்! இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் சிறப்பு நோ்காணல்!

விருத்தாசலம், தென்காசி தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை: ஈரோடு கிழக்கு மீண்டும் ஒதுக்கீடு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - திமுக இடையே தொடரும் இழுபறி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


