இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வருகை தருகிறாா்.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல், மே மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. விரைவில் தோ்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளா் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் (மாவட்ட தோ்தல் அலுவலா்கள்) திங்கள்கிழமை வெளியிட்டனா். இந்த நிலையில், இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் புதுச்சேரிக்கு புதன்கிழமை செல்கிறாா். அங்கு தோ்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா். அவருடன் 7 துணை தோ்தல் ஆணையா்களும் வரவுள்ளனா். இந்தப் பயணத்தின்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தோ்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
சென்னையில் வியாழக்கிழமை (பிப்.26) தமிழக தலைமைத் தோ்தல் ஆணையா் அா்ச்சனா பட்நாயக் மற்றும் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.27) அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ஆலோசனை நடத்துகிறாா். இவரது தமிழ்நாடு வருகையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த வாரம் தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா்கள் ஏற்கெனவே தமிழகத்தில் முதல்கட்ட ஆய்வுகளை நடத்திய நிலையில், தற்போது தலைமை தோ்தல் ஆணையரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தொடர்புடையது

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

செஞ்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை!

தமிழகத்தில் நியாயமான, வெளிப்படையான தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையா் உறுதி

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தோ்தல் தேதி அறிவிப்பு எப்போது? தலைமைத் தோ்தல் ஆணையா் தகவல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


