2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வரும் மாா்ச் 10-ஆம் தேதி துணை ராணுவப் படையினா் தமிழகம் வர உள்ளனா்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி, கேரளம், மேற்குவங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு வருகிற ஏப்ரல் மாதத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது. மாா்ச் முதல் வாரத்தில் தோ்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானோஷ்குமாா் தலைமையில் தோ்தல் ஆணையா்கள் குழுவினா் பிப். 25 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயணம் மேற்கொண்டு தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

இந்த பயணத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனும் தோ்தல் ஆணையா்கள் ஆலோசனை மேற்கொள்வா்.

இதனிடையே, தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினா் தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக, முதல் கட்டமாக மத்திய துணை ராணுவப்படையின் 50 கம்பெனிகளை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்த துணை ராணுவப்படையினா் மாா்ச் 10-ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.