டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கூட்டணி பற்றி பேசிய மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கையா? - செல்வப்பெருந்தகை பதில்!

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி செல்வப்பெருந்தகை பதில்...

News image
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்
Updated On :16 பிப்ரவரி 2026, 8:57 am

இணையதளச் செய்திப் பிரிவு

கூட்டணி குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குறித்துப் பேசவே தில்லி செல்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

மதுரை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கடந்த 17 ஆம் தேதி எங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியது. யாரும் பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசக் கூடாது என்று ராகுல், கார்கே, வேணுகோபால் ஆகியோர் சொல்லியிருக்கின்றனர். அவர்களைவிட பெரிய ஆள்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலை மதிப்பவன் நான். காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அதன்படி அரசியல் பயணத்தைத் தொடர்கிறோம். கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைத்து அவர்கள் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

மாணிக்கம் தாகூர் பேசியது தொடர்பாக கூப்பிட்டிருக்கிறார்கள், நாங்கள் அதுபற்றி ஆலோசனை செய்வோம். அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் அது தவறுதான்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.