டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அமைச்சராக இருந்தபோது 10 அல்ல, 2 கப்பல்கள்தான் வாங்கப்பட்டன: டி.ஆர். பாலு

பாஜகவின் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டிஆர் பாலு தரப்பு பதில்...

News image
டி.ஆர். பாலு
Updated On :16 பிப்ரவரி 2026, 7:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் இன்று(பிப். 16) நேரில் ஆஜராகியுள்ளனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 2023ல் 'திமுக பைல்ஸ்' என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் மீதான முறைகேடுகளை வெளியிட்டார்.

அதில், திமுக எம்பி. டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாகவும் இதன் மதிப்பு ரூ. 10 ஆயிரம் கோடி என்றும் கூறி அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து டி.ஆர். பாலு, தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சென்னை சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. டி.ஆர். பாலு, அண்ணாமலை ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

அப்போது டி.ஆர். பாலு தரப்பு, "மத்திய அமைச்சராக இருந்தபோது நான் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 10 மீன்பிடி கப்பல்கள் வாங்கியதாக மு.க. அழகிரி விஷயம் தெரியாமல் பேசியுள்ளார். அதனை ஆதாரமாக வைத்து அண்ணாமலை என் மீது குற்றம் சாட்டியுள்ளார். நான் அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்கள் வாங்கவில்லை, 2 கப்பல்கள்தான் வாங்கினேன். சேது சமுத்திரத் திட்டம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அது காமராஜரின் கனவுத் திட்டம்" என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளார். இரு தரப்பிலும் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.