டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது: தமிழிசை

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News image
தமிழிசை சௌந்தரராஜன்- கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திமுக மாடல் அரசாங்கம் முற்றிலும் நிர்வாக சீர்கேட்டினால் நிலை குலைந்து போயிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்... 9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது... இளைஞர்களின் வாழ்க்கை நசுக்கி விட்டு இளைஞர் அணி மாநாடு நடத்துவது தான் திமுகவின் அரசியல் நாடகம்..

பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள்.. இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம்.. வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும் இந்த இந்த இளைஞர்கள்.. விடிவு காலம் வேண்டும் என்று கடுமையாக தயாரித்து...

தேர்வுக்கு வந்தால்.. தேர்வு எழுதுவதே போராட்டமாக போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை... ஆயிரக்கணக்கானோர் தங்கள் நேரத்தையும் பொருளையும் செலவிட்டு.. ஆர்வமுடன் வந்தவர்கள் அலை கழிக்கப்பட்டிருக்கிறார்கள்...

நியாயமாக சரியான திட்டமிடலுடன் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.. மறுபடியும் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது எந்த குளறுபடியும் இல்லாமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை...இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.