டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்

தமிழகத்தில் பிப். 12 வரை இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்...

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 12-ஆம் தேதி வரை இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 8) முதல் பிப். 11-ஆம் தேதி வரை வட வானிலையே நிலவும். நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிப்பொழிவு இருக்கும்.

இதற்கிடையே, பகல் நேரங்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓரிரு இடங்களில் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.