டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,640 குறைந்தது! வெள்ளி கிலோ ரூ. 20,000 குறைவு!!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 4:26 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபமாக தங்கம் விலை ஒருநாளில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் ஏற்படுகிறது.

கடந்த ஜன. 29 அன்று அதிகபட்சமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது. பின்னர் குறைந்த நிலையில் கடந்த இரு நாள்கள் தங்கத்தின் விலை உயர்ந்தது.

இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ. 580 குறைந்து ரூ. 14,320-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைவு!

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 300-க்கும் ஒரு கிலோ ரூ. 20,000 குறைந்து ரூ. 3,00,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.