டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 11:06 pm

தினமணி செய்திச் சேவை

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (பிப்.5) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (பிப்.5) மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.6 முதல் பிப்.10-வரை வட வானிலை நிலவக்கூடும்.

பனி மூட்டம்: நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(பிப்.5) முதல் பிப்.10 வரை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் வியாழக்கிழமை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.