டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேட்டி...

News image
கனிமொழி - ENS
Updated On :4 பிப்ரவரி 2026, 8:39 am

இணையதளச் செய்திப் பிரிவு

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டு வருகிறோம். இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பல அமைப்புகள் எங்களைச் சந்தித்து கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துகளை எல்லாம் ஒருங்கிணைத்து பரிசீலனை செய்து எந்த கருத்துகள் எல்லாம் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்பதை முடிவு செய்து முதல்வரின் அனுமதி பெற்று பின்னர் தேர்தல் அறிக்கை உருவாகும். எங்களுடைய இணையதளம், செயலியில் உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்" என்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழுவில் இருக்கக்கூடியவர்கள்தான் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த மற்ற விஷயங்களைப் பேசுவார்கள். இதுவரையில் தொகுதிகள் பற்றி பேசப்படவில்லை, எனவே, நான் அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது" என்று கூறிய அவர்,

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து, "தமிழ்நாட்டைச் சேர்ந்த சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஒவ்வொரு முறை பேச முற்படும்போதும் தடுக்கப்பட்டு அவரது உரையை பதிவு செய்ய முடியாத சூழல் இருந்ததால்தான் அங்கிருந்த அத்தனை பேரும் அமளியில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது" என்றார்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "யாராவது கூட்டணியில் புதிதாக வந்தால் முதல்வர் அதுகுறித்து அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.