திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 21 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

CM Vijay

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - Youtube

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:58 am IST
6:28 am, 21 ஆகஸ்ட் 2026

கார் வேண்டாம்!

திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

6:06 am, 21 ஆகஸ்ட் 2026

பேரவையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம்..! உதயநிதி பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்பு

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "முதல்வர் அந்த 3 கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சட்டப்பேரவையில் பேசினால் சரிவராது" என்று கூறினார்.

உடனே தவெக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.

6:05 am, 21 ஆகஸ்ட் 2026

தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெயர் வைத்தது நான்தான் என்று அக்கட்சியின் நிர்வாகியும் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

6:05 am, 21 ஆகஸ்ட் 2026

மேக்கேதாட்டு அணைக்கு 2027-ல் அடிக்கல் நாட்ட திட்டம் - தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது! - அன்புமணி வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணைக்கு அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் தில்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

6:05 am, 21 ஆகஸ்ட் 2026

சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம்

இன்றைய சட்டப்பேரவையில் எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த வாரம் மீன்கள் இறந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

6:05 am, 21 ஆகஸ்ட் 2026

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 21, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

6:05 am, 21 ஆகஸ்ட் 2026

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள்: 13,343 தேர்வர்களுடன் இன்று தொடங்கியது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுகள், 13,343 தேர்வர்களுடன் இன்று (ஆக. 21) தொடங்கியது.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் ஆக. 21, 22, 23, 29, 30 ஆகிய காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.