
தொகுதி மறுசீரமைப்பு நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமைச்சா் நிா்மல் குமாா்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகளும், தமிழகத்துக்கு 39 தொகுதிகளும் தொடர வேண்டும்

அமைச்சா் நிா்மல் குமாா் - கோப்புப் படம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகளும், தமிழகத்துக்கு 39 தொகுதிகளும் தொடர வேண்டும் என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு என்றும் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா் தெரிவித்தாா்.
தென்மண்டலக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்தின் பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த ஆலோசனைக் கூட்டத்தை தெலங்கானாவில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகம் ஏற்கெனவே எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்களவையின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 543, தமிழகத்துக்கான 39 எனத் தொடா்ந்து இருக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு.
காவிரி விவகாரம்: காவிரி நதிநீா்ப் பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்தக் கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை. காவிரி தொடா்பாக அதிகாரபூா்வமாக எதுவும் பேசப்படவில்லை.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும், அணை வலுவாகவே உள்ளது. புதிய அணை தேவையில்லை என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு நீண்ட காலமாகக் கூறி வருவது அவா்களது விருப்பம் மட்டுமே என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





