ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கர்நாடக ஓட்டுநரைத் தாக்கி விடியோ வெளியிட்டவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து!

கர்நாடக ஓட்டுநரைத் தாக்கி விடியோ வெளியிட்டவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

HC

உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்) - Din

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:48 pm IST

கர்நாடகத்திலிருந்து யாரும் தமிழகத்துக்குள் வரக்கூடாது எனக் கூறி சுற்றுலா வாகன ஓட்டுநரைத் தாக்கி சமூக வலைத்தளங்களில் விடியோ வெளியிட்டவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில், தமிழ்நாடு எழுச்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் சிலம்பரசன், கொள்கை பரப்பு செயலாளர் அப்துல் மாலிக் ஆகியோர், கர்நாடகத்தில் இருந்து யாரும் தமிழகத்துக்குள் வரக்கூடாது என கர்நாடக மாநில சுற்றுலா வேனை தடுத்து, ஓட்டுநரைத் தாக்கி கர்நாடக கொடியை அகற்றி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இரு மாநில மக்களிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி, ஈரோடு வடக்கு போலீஸார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து, சிலம்பரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, குண்டர் சட்டத்தில் அடைக்கபட்டதை எதிர்த்து வாதாடினார். குண்டர் தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உண்மையை சரி பார்க்காமல் கண்மூடித்தனமாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிலம்பரசன் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Summary

Goonda Act revoked against person assaulted Karnataka driver

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.