ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை நிலை ராணுவம் அனுப்ப நேரிடும்: உச்ச நீதிமன்றம்

மேகமலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை நிலை ராணுவம் அனுப்பப்படும் என தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மேகமலை ஆக்ரமிப்புகளை அகற்ற முடியாவிட்டால் துணை ராணுவம் அனுப்பப்படும்: உச்ச நீதிமன்றம்

மேகமலை ஹைவேவிஸ் - மணலாறு இடையே நெடுஞ்சாலையில் உலவிய காட்டு யானை.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

தமிழகத்தின் மேகமலை வனப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏற்கெனவே உத்தரவிட்டபடி விரைந்து அகற்றாவிட்டால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரித்தது.

மேலும், மேகமலை வனப் பகுதியில் இலவம் பஞ்சு சாகுபடி முழுமையாகக் கைவிடப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

தமிழ்நாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா கூறியதாவது: "புலிகள் சரணாலய வனப் பகுதியில் 4,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம் பஞ்சு பயிரிடப்பட்டுள்ளது. அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களில் சில குடும்பங்கள் பல தலைமுறையாக அந்தப் பகுதியிலேயே வசித்து வருபவர்கள். எனவே, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகே அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். மேலும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இயங்கி வந்த விடுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்த சிறிது காலம் தேவைப்படுகிறது. எனவே, அவகாசம் வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், "பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள விடுதிகளை மூடினால் மட்டும் போதாது, ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல் அப்பகுதிகளில் இலவம் பஞ்சு சாகுபடியும் முழுமையாகக் கைவிடப்பட வேண்டும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர் . மேலும், "ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்றால் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்' என எச்சரித்தை நீதிபதிகள், அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள அரசு ஊழியர்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக் கட்டடங்களுக்கான மின்சாரம், நீர் இணைப்பு உள்ளிட்டவற்றைத் துண்டியுங்கள்' என்றும் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை தொடர்பான நிலை அறிக்கையை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பின்னணி: தமிழகத்தின் "களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்', "ஸ்ரீவில்லிபுத்தூர் -மேகமலை புலிகள் காப்பகம்' மற்றும் "கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம்' உள்ளிட்ட அகத்தியமலை நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் பெருகியும் வருகின்றன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில், காலவரம்புக்கு உள்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்தைத் தயாரித்து முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கு கடந்த மே 29-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களாகக் கண்டறியப்பட்ட ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையையும், சட்ட நடவடிக்கையையும் தொடங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Summary

Paramilitary forces will be deployed if encroachments in Meghamalai are not removed: Supreme Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.