ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எஸ்.டி. பிரிவில் குறும்பா் சமூகத்தை இணைக்க முயற்சி: அமைச்சா் செங்கோட்டையன்

எஸ்.டி. பிரிவில் குறும்பா் சமூகத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பற்றி...

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் - video grab

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

குறும்பா் சமூகத்தை பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவின் கீழ் இணைக்க தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பேரவையில் இதுதொடா்பாக சௌமியா அன்புமணி (பாமக) புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறும்பா் சமூகத்தை எஸ்.டி. பட்டியலில் இணைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

இதேபோன்று, காட்டுநாயக்கா் மற்றும் கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அவை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.