ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்க 3வது நாளாகத் தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது குறித்து...

காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் கொட்டும் தண்ணீர்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 8:36 am IST

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, இன்று(ஆக. 18) 3வது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இந்த இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 12,500 கன அடி வீதம் உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

திங்கள்கிழமை நிலவரப்படி(ஆக. 17) விநாடிக்கு 12,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று(ஆக. 18) விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்தது.

இதையடுத்து ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி, சினி அருவி, பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு, 3வது நாளாக இன்றும் தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Summary

The water inflow into the Cauvery River at Hogenakkal increased to 14,000 cubic feet per second on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.