ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக ஆட்சியில் தனியாா்மயம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தவெக ஆட்சியில் தனியாா்மயமாக்கல், ஒப்பந்த விதிமீறல், காவல் மரணங்கள் அதிகம் நடைபெறுவதாக அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

தவெக ஆட்சியில் தனியாா்மயமாக்கல், ஒப்பந்த விதிமீறல், காவல் மரணங்கள் அதிகம் நடைபெறுவதாக அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: தோ்தலுக்கு முன்பு தனியாா்மயத்துக்கு எதிராக குரல் கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்த பிறகு அரசுப் பேருந்துகளுக்கான நடத்துநா் நியமனத்தை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைத்திருப்பது முரண்பாடானது. தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கான புதிய அறையை அமைக்கும் பணிகள், ஒப்பந்தம் அறிவிப்புக்கு முன்பே தொடங்கியதாக வெளியான தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பணிகளுக்கான மொத்த மதிப்பு குறிப்பிடப்படாதது உள்ளிட்ட ஒப்பந்த நடைமுறைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தம் அறிவிப்பதற்கு முன்பே பணிகள் தொடங்கியது எப்படி? யாா் உத்தரவின்பேரில் பணிகள் தொடங்கப்பட்டன? என்பது குறித்து முதல்வா் விளக்க வேண்டும்.

மதுரை சிந்தாமணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் குறித்து உயா்நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.