ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுரையில் காவல்துறை தாக்கியதால் பூசாரி மரணம்? உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி விசாரணை!

மதுரையில் காவல்துறை தாக்கியதால் பூசாரி மரணமடைந்தாரா என உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணவறையில் நீதிபதி விசாரணை நடத்தினார்

karur stampede: Govt job could be granted but one condition: Madurai HC Bench

உயா்நீதிமன்ற மதுரைக் கிளை - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:15 pm IST

மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் பூசாரி உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பிணவறையில் நீதிபதி விசாரணை நடத்தினார்.

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம் (55) என்பவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18 அன்று தகராறு ஏற்பட்டது.

தகராறு தொடர்பான விசாரணையின் போது பரமசிவத்தை சிந்தாமணி காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆகஸ்ட் 11 முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் ஆகஸ்ட் 15ஆம் தேதி உயிரிழந்தார்.

தனது உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் காவல்துறையினர் தாக்கியதுதான் என அவர் இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்த குடும்பத்தினர் இது குறித்து உரிய விசாரணை நடத்துமாறும், பரமசிவத்தை தாக்கிய சிந்தாமணி காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த், காவலர் அப்துல் முகமது உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தியும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இதனடிப்படையில், மாவட்ட நீதிபதி மேற்பார்வையில் உடல் கூராய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, இன்று மதுரை மாவட்ட 5வது நடுவர்மன்ற நீதிபதி லட்சுமிபிரியா, அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் பரமசிவத்தின் உடலை ஆய்வு செய்து, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

Summary

Did a priest die after being assaulted by the police in Madurai? Judicial inquiry ordered by the High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.